Pages

Wednesday 26 August 2015

சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி மற்றும் செயல் முறை விளக்கம்

தேவையான பொருட்கள் :

  • நண்டு - கால் கிலோ
  • சின்ன வெங்காயம் - 15
  • தக்காளி - 1
  • பச்சைமிளகாய் - 3
  • சாம்பார் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - பாதி மூடி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - சிறிதளவு
செயல் முறை விளக்கம் :

நண்டை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும். பின்பு தேங்காய் துருவல், நன்கு சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு, நண்டு போன்றவற்றை போட்டு நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும்.

வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். கடைசியில் கிளறி வைத்த நண்டை அதில் போட்டு வெந்தபிறகு இறக்கவும்.

0 comments:

Post a Comment