Pages

Thursday 12 February 2015

Mysore Bonda (மைசூர் போண்டா) சுட சுட மற்றும் சுவையான போண்டா ரெடி


தேவையானவை பொருட்கள் :

  • உளுத்தம்பருப்பு – 1 கப்,
  • பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்,
  • இஞ்சி – 1 துண்டு,
  • பச்சை மிளகாய் – 2,
  • மிளகு – 2 டீஸ்பூன்,
  • சீரகம் – 2 டீஸ்பூன்,
  • முந்திரிப்பருப்பு – 10,
  • பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை – சிறிது,
  • தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்,
  • உப்பு – ருசிக்கேற்ப,
  • எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை விளக்கம் :


  • உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். 
  • அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். 
  • அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். 
  • எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.

0 comments:

Post a Comment