Pages

Saturday 20 May 2017

சுவையான லட்டு செய்வது எப்படி செய்முறை விளக்கம்

தேவையான பொருட்கள் :
1. கடலைமாவு = 2 கோப்பை
2. சர்க்கரை – 3 கோப்பை
3. நெய் = 1/4 கோப்பை
4. முந்திரி திராட்சை =உடைத்தது 1/4 கோப்பை
5. தண்ணீர் = 2 கோப்பை
6. ஏலப்பொடி – 1/2 தேக்கரண்டி .
7. லட்டு கலர் = 2 சிட்டிக்கை
செய்முறை :
முதலில் கடலை மாவை கட்டிகள் இல்லாமல் ஜலித்து வைக்கவும் .
அதில் கலர் பொடியை போட்டு நீரை ஊற்றி கரைத்துக் கொள்ளவும் .
கரைத்த மாவின் பதம் தோசை மாவின் பதமாக சல்லடை கரண்டியில் ஊற்றினால் தானாக விழ வேண்டும் .
பின்பு எண்ணெயை சூடாக்கி அதில் கரைத்து வைத்துள்ள மாவை லட்டுக்கரண்டி அல்லது ஜல்லடைக் கரண்டியில் சிறிது மாவை ஊற்றவும் .
பூந்தி நன்கு முத்து முத்தாக விழ வேண்டும் , அடுப்பின் அனலை மிதமாக எரியவிடவும் . பூந்தி வெந்ததும் அரித்து எடுத்து தனியே வைக்கவும் .
இவ்வாறு அனைத்து மாவையும் வேகவைத்து வைக்கவும் .
பின்பு வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையில் நீரை ஊற்றி ஒரு கொத்தி வந்ததும் மிதமான சூட்டில் பத்து நிமிடம் வைத்திருந்து பாகு காய்ச்சவும் .
அதில் தயாராக்கியுள்ள பூந்தியைப் போட்டு ஏலப்பொடி மற்றும் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையை போட்டு கலக்கவும்.
கைகளில் சிறிது நெய்யை தடவிக்கொண்டு கைப் பொறுக்கும் சூட்டில் உருண்டைகளை பிடிக்கவும் .

0 comments:

Post a Comment