Pages

Featured Posts

Thursday, 26 January 2023

சிக்கன் கருவேப்பிலை மிளகு வறுவல் (காரசாரமாக )செய்வது எப்படி



சிக்கன் கருவேப்பிலை மிளகு வறுவல் செய்வது எப்படி

 

தேவையான பொருட்கள் :

 

·         சிக்கன் - 1/4 கிலோ

·         பூண்டு - 15 பல்

·         பச்சைமிளகை - 7

·         பட்டை - ஒரு பெரிய துண்டு

·         லவங்கம் - 2

·         ஏலக்காய் - 2

·         கருவேப்பிலை - இரண்டு கைப்பிடி அளவு

·         மிளகு - ஒரு கைப்பிடி அளவு

·         உப்பு - தேவையான அளவு

·         மஞ்சள் தூள் - சிறிதுஅளவு

·         எண்ணெய் - தேவையான அளவு

 

மசாலா அரைக்க தேவையான பொருட்கள் 

கருவேப்பிலை, மிளகு, பச்சைமிளகாய்,பூண்டு, பட்டை லவங்கம்ஏலக்காய் சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்.

 

செய்முறை விளக்கம் :

 

·      முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிதாக நறுக்கிய சுத்தம் செய்த சிக்கன் போடவும்.

·         உப்பு மற்றும் மஞ்சள் போடி சேர்க்கவும் மேலும் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

 அரைத்து வைத்த மசாலாவை வாணலியில் போட்டு நன்றாக கிளறி 10 நிமிடம் சிறிய தீயில் நன்றாக வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் சுவையான சிக்கன் கருவேப்பிலை மிளகு வறுவல் தயார்.