Pages

Thursday, 14 May 2015

சிக்கன் மஷ்ரூம் வறுவல் சுவையான மற்றும் கார சாரமான சமையல்


தேவையான பொருட்கள்:
 
  • chicken thigh_2 (or) chicken breast_1
  • மஷ்ரூம்_5 பெரியது
  • சின்ன வெங்காயம்_10
  • தக்காளி_பாதி
  • பச்சைமிளகாய்_1
  • இஞ்சி_ஒரு துண்டு
  • பூண்டிதழ்_3
  • மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள்_சிறிது
  • உப்பு_தேவைக்கு
  • புதினா&கொத்துமல்லி
தாளிக்க:

  • எண்ணெய்
  • கிராம்பு_3
  • பட்டை_1
  • பிரிஞ்சி இலை_1
  • சீரகம்
செய்முறை விளக்கம்:


  • சிக்கனை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கழுவீவிட்டு சிறிது தயிர், மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து பிசறி ஒரு 1/2 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • இஞ்சி,பூண்டு தட்டிவைக்கவும்.மஷ்ரூம்,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.
  • ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,மஷ்ரூம் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
  • இவை நன்றாக வதங்கியதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  • இவை வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மூடி வேகவிடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.சிக்கன்,மஷ்ரூம் இவை வேகும்போது வெளிவரும் தண்ணீரே போதுமானது.
  • சிக்கன் நன்றாக வெந்து,தண்ணீர் முழுவதும் வற்றியதும் எலுமிச்சை சாறு விட்டு,புதினா&கொத்துமல்லி தூவி இறக்கவும்.

0 comments:

Post a Comment