தேவையான பொருட்கள்:
- புளி - பெருநெல்லி அளவு
- தக்காளி பெரிது - 1
- துவரம் பருப்பு வேகவைத்தது - 1 கரண்டி
- துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
- தணியா - 3 ஸ்பூன்
- மிளகு - 2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிது
- மிளகாய் - 2
- பூண்டு விருப்பமிருந்தால் - 4 பல்
- கருவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- மஞ்சள் தூள் - சிறிது
- உப்பு - தேவைக்கு
- தூதுவளை இலை ஆய்ந்தது - 1 பிடி
- தாளிக்க
- நல்லெண்ணை,கடுகு,பச்சை மிளகாய் -1
தயார் செய்யும் முறை:
- முதலில் வாணலியில் துவரம் பருப்பு 1 ஸ்பூன்,தணியா,மிளகு,சீரகம்,மிளகாய் - 2,பூண்டு,தூதுவளை இலை எல்லாம் வறுத்து தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும்.
- புளியை நீரில் கரைத்து மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதித்த பின் ரச மசாலாவை சேர்க்கவும். வேகவைத்தப் பருப்பை சேர்த்து, உப்பு சேர்க்கவும்.வாசனை வந்ததும் இறக்கி நல்லெண்ணையில் கடுகு,பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும்.
0 comments:
Post a Comment