Pages

Sunday, 26 February 2017

சுவையான பிரெட் அல்வா (Bread Halwa) செய்முறை விளக்கம்


தேவையான பொருட்கள்

  •     பிரெட் ஸ்லைசஸ் - 10
  •     சீனி - 1 1/2 கப்
  •     பால் - 1   1/2  கப்
  •     முந்திரி - 15
  •     உலர்ந்த திராட்சை -10
  •     நெய் - 1 /2 கப்
  •     சிகப்பு கலர் - ஒரு சிட்டிகை

செய்முறை விளக்கம்

  •     மில்க் பிரட் அல்லது சால்ட் பிரெட்.பிரெட் ஓரத்தை கட் செய்து வித்து விடவும்   
  •     பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி  பொடித்து  கொள்ளவும்.
  •     வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும்,    உடைத்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  •     அதே வாணலியில் பொடித்து வைத்துள்ள பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  •     பிறகு வாணலியில் 1 1/2  கப் பால்  ஊற்றிசக்கரை  போட்டு 3 நிமிடம் கிளறி விட்டு வேக விடவும்.
  •     சக்கரை  பாகாக கரைந்து, கொதித்து பொங்கியது போன்று வரும் போது, வறுத்து வைத்துள்ள பிரெட் துகள்களைப் போட்டு நன்கு கிளறி விடவும்.
  •     பிரட் துகள்கள் சற்று வெந்தவுடன் அதனுடன் நெய்,   சேர்த்து நன்கு கிளறி விடவும்
  •     அல்வா பதம் வரும்போது, வறுத்த முந்திரி, திராட்சை சேரத்து கிளறி விடவும்.
  •      நறுக்கின முந்திரி சேர்த்து  பரிமாறவும்.

செட்டிநாட்டு சுவையில் நண்டு குழம்பு (Crab Kulambu) செய்யும் முறை


தேவையான பொருட்கள்:
  • நண்டு – ஒரு கிலோ
  • சோம்பு – 2 தேக்கரண்டி
  • பூண்டு – 5 பல்
  • வெங்காயம் – 3
  • நாட்டுத் தக்காளி – 4
  • மிளகு – ஒரு தேக்கரண்டி
  • சீரகம் – 2 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
  • வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  • பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிட வேண்டும். நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும்.

பிரட் கட்லட் (Bread Cutlets) மாலைநேர சுவையான நொறுக்கு தீனி செய்முறை விளக்கம்


தேவையான பொருள்கள்:-
  • சால்ட் பிரட் பெரிய சைஸ் - 6
  • உருளை கிழங்கு வேகவைத்து உதிர்த்தது - 3 கப்
  • கேரட், பீட்ரூட் துருவியது - 2 கப்
  • மஞ்சள் பொடி, காரட் பொடி, கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு
  • தயிர் (புளிப்பில்லாதது) - 3 கப்
  • சர்க்கரை - 2 டீஸ்பூன்
  • கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 1/2 கப்
  • சீரகப்பொடி - 1ஸ்பூன்
  • பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:-

  • முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சிரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பட்டாணி, கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும். பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிரட்டை தண்ணீரில் நனைத்து இரண்டு கைகளுக்குகிடையே வைத்து நன்றாக பிழியவும்.
  • இரண்டு பிரட்டிற்கு இடையிலோ அல்லது ஸ்லைஸின் நடுவிலோ காய்கறிகளை வைத்து நன்கு மூடி வைக்கவும் தேவைக்கேற்ற வடிவத்தில் (உருண்டையாகவோ, தட்டையாகவே செய்து, எண்ணெயில் சிவக்கும் பதத்தில் பொரித்தெடுக்கவும்).
  • தயிரில் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கடைந்து பொரித்து வைத்திருக்கும் கட்லெட் மீது இரண்டு டீஸ்பூன் அதன் மேல் சீரகப் பொடி கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

Friday, 10 February 2017

பாசிப்பருப்பு பக்கோடா (Green Gram Dal Pakoda) மொறுமொறு சுவை


தேவையான பொருட்கள்:

  • பாசிப்பருப்பு - 1/2 கப்
  • பெரிய வெங்காயம் - 1 1/2
  • பச்சைமிளகாய் - 2
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • இஞ்சி - அரை இன்ச்
  • தனியா - 1 டீஸ்பூன்
  • உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
  •  பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  •  பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  •  அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.
  •  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.
  •  இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.