Pages

Saturday, 25 November 2017

கற்பூரவல்லி பச்சடி சளி பிரச்சனைக்கு மிகவும் நல்லது


தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலை -  ஒரு கைப்பிடி    

புளிக்காத தயிர்- 1 கப் 

பச்சை மிளகாய்- 2

கடுகு, வெந்தயம் நல்லெண்ணெய் - 1 ஸ்பூன் 

உப்பு- தேவையான அளவு 

செய்முறை:

•கற்பூரவல்லி இலையை எடுத்து நன்கு கழுவி, பொடிப்பொடியா நறுக்கவும். அதனுடன்  புளிக்காத தயிரைச் சேர்க்கவும். 

• பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், கடுகு சேர்த்து அரைக்கவும். 

•  நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

• கற்பூரவல்லி பச்சடி தயார். 

• உடலுக்கு சத்தான இந்த பச்சடி சளி பிரச்சனைக்கு மிகவும் நல்லது.