தேவையான பொருள்கள்:
- முருங்கைக்காய் = 20 கிராம்
- பயத்தம் பருப்பு = 25 கிராம்
- வெங்காயம் = 4
- தக்காளி = 2
- மிளகு = 5 கிராம்
- பட்டை = 1
- கிராம்பு = 1
- தேங்காய் பால் = 100 மி.லி
- நெய் = 1 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.
- வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் முருங்கைக்காயை லேசாக வதக்கி இறக்கி தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
- பிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி பிறகு பட்டை, கிராம்பு போட்டு கிளறி தக்காளி போட்டு வதக்கி பிறகு வேக வைத்த முருங்கைக்காய் கலவையை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
- பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி கொதிக்க வைத்து வடிக்கட்டி சூடாக பரிமாறவும்.
0 comments:
Post a Comment