skip to main |
skip to sidebar
தேவையான பொருள்கள் :
-
பாதாம் பருப்பு – 20
-
பாசி பருப்பு – அரை கிலோ
-
சர்க்கரை – அரை கிலோ
-
கிஸ்மிஸ் பழம் – 10
-
நெய் – 100 கிராம்
செய்முறை :
-
பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத் தனித் தனியாக வெறும் வாணலியில்
-
வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி அதனுடன்
நெய்யில் வறுத்த கிஸ்மிஸ் பழம் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்
-
பின்பு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணிய கலவையை அதில் கொட்டி
நன்கு கிளரி சூடாக இருக்கும் போதே சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
-
புரதச்சத்து நிறைந்த லட்டு ரெடி
தேவையானவை:
- கீரைத் தண்டு – ஒருகட்டு
-
பெரிய வெங்காயம் – 1
-
பச்சை மிளகாய் – 2
-
தக்காளி – 1
-
கறி வேப்பிலை – கொஞ்சம்
-
கொத்தமல்லி – ஒரு பிடி
-
புளிப்பில்லாத தயிர் – 2 கப்
-
சீரகம் – அரை டீஸ்பூன்
-
உப்பு – சுவைக்கேற்ப
-
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
- கீரைத் தண்டை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து
ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- இதனுடன் பொடித்த வெங்காயம், தக்காளி, பச்சை
மிளகாய், கொத்த மல்லி, தயிர் சேர்த்து, கலந்து கொள்ளவும்.
- எண்ணெய் காய
வைத்து சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து இதில் கொட்டவும்.
- இந்த பச்சடி
சப்பாத்தி அசைவ உணவுகளுக்கு நன்றாக இருக்கும். இதில் தேவையெனில் கேரட்டைக்
கூட சேர்த்துக் கொள்ளலாம்.