தேவையானவை:
- கீரைத் தண்டு – ஒருகட்டு
- பெரிய வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 1
- கறி வேப்பிலை – கொஞ்சம்
- கொத்தமல்லி – ஒரு பிடி
- புளிப்பில்லாத தயிர் – 2 கப்
- சீரகம் – அரை டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
- கீரைத் தண்டை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- இதனுடன் பொடித்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்த மல்லி, தயிர் சேர்த்து, கலந்து கொள்ளவும்.
- எண்ணெய் காய வைத்து சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து இதில் கொட்டவும்.
- இந்த பச்சடி சப்பாத்தி அசைவ உணவுகளுக்கு நன்றாக இருக்கும். இதில் தேவையெனில் கேரட்டைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment