Pages

Wednesday, 12 August 2015

சோயா பருப்பு உருண்டை சுவையான பிரியாணி செய்முறை விளக்கம்


தேவையான பொருட்கள்: 
  • பாசுமதி அரிசி - 200 கிராம்
  • மீல் மேக்கர் - 8 
  • கடலைப் பருப்பு - 50கி
  • துவரம் பருப்பு - 50கி
  • மிளகாய் -  5
  • இஞ்சி - சிறு துண்டு
  • சோம்பு - சிறிது
  • உப்பு - தேவைக்கு
  • பெருங்காயம் - தேவைக்கு
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2
  • தக்காளி - 1 நறுக்கியது
  • கேரட் - 1
  • உருளைக் கிழங்கு - 1 அ 2
  • பூண்டு பல் - 8
  • பச்சைமிளகாய் -2 
  • தயிர் - சிறிது
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகாய்த தூள் - 1ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்
  • எண்ணை ,நெய் - தேவைக்கு
  • தாளிக்க
  • ஏலம்,பட்டை,லவங்கம்,பிரியாணி இலை,முந்திரி,கொத்தமல்லி,புதினா இலைகள்

தயார் செய்யும் முறை: 
  • முதலில் மீல் மேக்கரை கொதி நீரில் ஊறவிடவும்.கடலைப் பருப்பு,துவரம் பருப்பு,மிளகாய் இவற்றை ஊற வைத்து மீல் மேக்கருடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • பருப்பு உருண்டைகளாக உருட்டி, எண்ணையில் பொரிக்கவும். காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும்.கொஞ்சம் வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் இவற்றை அரைக்கவும்.பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். 
  • வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,லவங்கம்,ஏலம்,பிரியாணி இலை முந்திரி என ஒவ்வொன்றாய் தாளித்து ,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி அரைத்த விழுதை சேர்த்து வதக்கி,காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலாத் தூள் உப்பு சேர்க்கவும்.தயிர் சேர்க்கவும்.
  • பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக சாதம் வடித்து ஆறவிடவும். காய்கறிகள் வதங்கியவுடன் பருப்புருண்யைகளை தேவைக்கு சேர்த்து சாதத்தை சேர்த்து கிளறி ,முந்திரி ,புதினா கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.பருப்புருண்டை பிரியாணி ரெடி.

Green Banana Fry Indian Recipes | How to Make Taste and Spicy Recipes


Ingredients:

  • Green Banana/Plantain -2
  • Garlic paste - 3 tsp
  • Red chilli powder -1tsp
  • Salt
  • Termeric - 1pinch

For seasoning:

  • Oil -1 tsp
  • Mustrad seeds-1 tsp
  • Urad dal -1tsp
  • Channa dal -1 tsp
  • Curry leaves -1 tsp
  • Salt to taste

How to make:

  • Cut Plantain into small slices(very thin ) into a bowl of cold water.
  • In a pan heat oil then add all seasoning ingredients.
  • Add garlic paste,Termeric and Red chlli powder.
  • Add little water(1/4 of cup) and salt.Let it boil then mix well.
  • once the garlic cooked well then add the plantain.
  • cover it .mix well occacianlly.keep it in low flame.
  • let it cook well until soft.